“சூப்பர் மூன்” என்றால் என்ன?? வீடியோ விளக்கம்!
“சூப்பர் மூன்” என்றால் என்ன?? வீடியோ விளக்கம்!பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால், மிகப் பெரிய அளவில் அது தெரியும். “சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இந்த சந்திரனால் தான் பூமியில் தற்போது பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியை சந்திரன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். அந்தப் பகுதியில் சந்திரன் வரும் போது வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரியும்.இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவான 3,56,577 கி.மீ., தொலைவில் சந்திரன் தோன்றும். அதனால், அது உருவ அளவில் சற்றுப் பெரிதாகவும், அதிக ஒளியுடையதாகவும் இருக்கும். கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இது போல சந்திரன் பூமியை நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
NAC Science Committee | Researchers | Citizen Scientists | Educators | Students |
சமீபத்தில், ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது, சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் தான் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், இது வழக்கமான ஒன்று என்றும், இதனால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
இந்த பதிவை எழுதியது - admin
தளத்தின் பெயர் - http://puthiyaulakam.com

தோப்புக்கரணம் போடுவது ஏன்? தெரியாத உண்மை!தோப்புக்கரணம் போடுவது ஏன்? தெரியாத உண்மை!ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி
பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
இந்த பதிவை எழுதியது - Admin
தளத்தின் பெயர் - http://puthiyaulakam.com

சென்ட்ரல் வங்கியில் பணி இடங்கள்....இளைஞர்களே முயற்சியுங்கள்....!


முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில், காலியாக உள்ள பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளுக்கு, இந்தி யாவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப் பிக்கலாம். இதைப் பற்றிய விவரம் வருமாறு:

1. பதவியின் பெயர்: முதுநிலை மேலாளர் (துப்பறிதல்)

   காலியிடங்கள்: 2;

2. பதவியின் பெயர்: வங்கிப் பாதுகாப்பு ஆலோசகர் (கடற்படை)

    காலியிடம்: 1;

3. பதவியின் பெயர்: மோசடிகள் குறித்த விசாரணை அதிகாரி

    காலியிடம்: 1;

4. பதவியின் பெயர்: பிசினஸ் டெவலப்மென்ட் ஆபீசர்

    காலியிடங்கள்: 2;

5. பதவியின் பெயர்: கல்வியாளர் (பேகல்டி மெம்பர்) 

   காலியிடங்கள்: 3;

6. பதவியின் பெயர்: ஆர்க்கிடெக்ட் 

    காலியிடங்கள்: 2;

7. பதவியின் பெயர்: சிவில் என்ஜினீயர்

    காலியிடங்கள்: 4;

8. பதவியின் பெயர்: எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்

    காலியிடங்கள்: 2;

9. பதவியின் பெயர்: நூலகர்

    காலியிடம்: 1

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றி தழ்களின் நகல்கள், டிமாண்ட் டிராப்ட் ஆகியவற்றை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு அனுப்பும்போது விண்ணப்ப உறையின் மேல்பகுதியில் “Application for the post of ..............”என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager HRD, Central Bank of India,
Chander Mukhi, 17th Floor,
Nariman point,
Mumbai - 400 021.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி: 29.3.2011

கல்வி மற்றும் வயதுத்தகுதி, விண்ணப்பக் கட்டணம், மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
இந்த பதிவை எழுதியது - Kovai
தளத்தின் பெயர் - http://www.kovainews24x7.com

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவுகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.


லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.


அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது.
அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.


மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
இந்த பதிவை எழுதியது - tamilCNN
தளத்தின் பெயர் - http://tamilcnn.com

விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் போதுமா?‘சிறந்த கணவன், மனைவியா இருக்க என்ன பண்ணணும்?’

புதுசா கல்யாணமான உறவுக்கார தம்பதி எங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப கேட்ட கேள்வி. அந்தக் கேள்வி எங்களைப் பார்த்து கேட்டது மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், உடனே பதில் தெரியலை. சிரிப்பைப் பதிலா தந்தோம். அவங்க விடவே இல்ல. ‘விட்டுக் கொடுத்து வாழ்ந்தா போதுமா?’னு அடுத்த கேள்வி. 

‘சிறந்த கணவன், மனைவியா திட்டம் போட்டெல்லாம் வாழ்ந்தது இல்லை. நீங்க ஆர்வமா கேட்கிறீங்க. யோசிச்சு சொல்றோம்’னு சொன்னோம். 

‘விட்டுக் கொடுத்து வாழ்ந்தா சிறந்த கணவன், மனைவியா இருக்கலாம்’னு நிறைய பேர் சொல்லுவாங்க. எங்களைப் பொறுத்தவரைக்கும் புரிஞ்சிக்கிட்டு விட்டுக்கொடுத்தாதான் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். இல்லன்னா எஜமான் & அடிமை வாழ்க்கைதான் கிடைக்கும். தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டுக்கொடுத்து வாழறதுல அர்த்தம் இல்லையே? ஒருத்தருக்கொருத்தர் ‘விட்டுக் கொடுத்துக்கிட்டே இருந்தா, ஏதோ ஒரு நேரம் ‘ஈகோ’ வந்து ஆட்டி படைச்சுடும். 

‘எத்தனை முறைதான் நானே விட்டுத்தர்றது? 10 முறை நான் விட்டுக் கொடுத்தேன். 4 முறைதான் நீ விட்டுக் கொடுத்திருக்கே’ன்னு கணக்குப் போட ஆரம்பிச்சுடுவோம்.

கணவனைப் பராமரிச்சு, குழந்தைகளை வளர்த்து, வீட்டை பராமரிக்கிறது மட்டும் மனைவியோட வேலை இல்லை. அப்படி மட்டும் செஞ்சா கணவனுக்காக மனைவி விட்டுக் கொடுத்து வாழறதா அர்த்தம். வெளில போய் குடும்பத்துக்காக சம்பாதிச்சு, மனைவிக்கு புடவை, நகை எடுத்துக் கொடுக்கிறது மட்டும் கணவனோட வேலை இல்லை. ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற திறமைகள் குடும்பத்தோட வளர்ச்சிக்குப் பயன்படணும். மனைவின்னா இந்த வேலை பார்க்கணும், கணவன்னா இந்த வேலை பார்க்கணும்ங்கற கட்டாயம் இல்லாம இருக்கணும். இப்பவும் எங்க போனாலும் தம்பதியா போகணும்ங்கிறதை முடிஞ்ச அளவு கடைபிடிக்கிறோம். எந்த முடிவா இருந்தாலும் சேர்ந்துதான் எடுக்கிறோம். தனிப்பட்ட முடிவுன்னு பெரும்பாலும் இருக்காது. என் முடிவுல சாந்தியோட ஆலோசனை இருக்கும்; அவங்க முடிவுல என்னோட ஆலோசனை இருக்கும். ‘விட்டுக் கொடுத்து’ மட்டும் வாழ்ந்தா கஷ்டமாவும், அதையே புரிஞ்சுக்கிட்டு செய்தா சுலபமாவும் இருக்கிறதுதான் எங்களோட அனுபவம்’ 

- சொல்லி நிறுத்துகிற துரைசாமி அவர்களின் முகத்தில் மட்டுமல்ல... வாழ்விலும் வழிகிறது நிறைவு. அறுபது வயதில் காலடி எடுத்து வைக்கிற கணவரின் மணிவிழாவுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் முனைவர் சாந்தி துரைசாமி. கோவை வேளாண் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் ‘டாக்டர்’ பட்டம் பெயருக்கு முன்பும், வாழ்க்கை முழுவதும் கைகோர்த்து நடக்கிற கணவரின் பெயர் பின்பும் அலங்கரிக்க... சாந்தியிடமிருந்து கம்பீரமாக வருகிறது பேச்சு. 

தொடர்கிறார் சாந்தி துரைசாமி

‘‘எட்டாம் வகுப்போட படிக்கிற கனவை மூட்டை கட்டி வெச்சுட்டு குடும்ப வாழ்க்கைக்குக் கிளம்பினேன். கணவர் டிகிரி முடிச்சிருந்தாலும் நான் பத்தாம் வகுப்புகூட முடிக்கலையேன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ‘கல்யாணத்துக்குப் பிறகு படிக்கக் கூடாதா?’ங்கிற கேள்விய முன்வெச்சது என் கணவர்தான். ‘மேல படி’ன்னு சொல்லி எனக்குள்ள இருந்த படிக்கணும்ங்கிற ஆர்வத்தைத் தூசு தட்டி வெளியே எடுத்தார். கணவர் பி.ஏ. படிச்சாருன்னா அவர் படிச்ச அதே காலேஜ்ல நான் எம்.ஏ. தேர்வு எழுதினேன். எட்டாங் க்ளாஸ் சாந்தி, சாந்தி எம்.ஏ. ஆனேன். இப்போ எனக்கு வேளாண் பல்கலைக்கழகத்துல டாக்டர் பட்டம் கொடுத்தபோது, விழா மேடையைச் சுற்றி புகைப்படக்காரர்கள். என்னோட சேர்ந்து பல பெரிய மனிதர்களும் கௌரவ டாக்டர் பட்டம் வாங்கினாங்க. 

புகைப்படக்காரர்கள் சூழ்ந்து பட்டமளிப்பை படம் எடுத்தாங்க. நான் பட்டம் வாங்கிறதைப் பார்க்க முடியாதபடி விழா மேடை தெரியாமல் போக, எழுந்து நின்று எக்கி எக்கிப் பார்த்த கணவரைப் பார்க்கும்போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. பட்டமளிப்பு உரையைப் பேசுகிறபோதே நா தழுதழுத்து போனேன்.  நான் இருக்கிற உயரத்திற்கு தன்னையே ஏணியாக மாற்றினார் என் கணவர். 

வீட்ல பால் காய்ச்சும்போதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் விட்டுத்தான் காய்ச்சுவாங்க. பாலை அப்படியே காய்ச்சி குடிச்சா உடம்புக்கு நல்லதில்லேன்னு பெரியவங்க சொல்லுவாங்க. கணவன் & மனைவியின் குடும்ப வாழ்க்கையை எவ்வளவு உண்மையா வாழணுங்கிற தத்துவத்தை தண்ணியையும் பாலையும் உதாரணமாக்கி பேராசிரியர் அப்துல் காதர் ஒரு  மேடையில் பேசினார். அதை என்னைக்கும் நான் மறந்தது இல்லை. 

தண்ணீரும் பாலும் இணை பிரியாத ஜோடின்னு வெச்சுக்குவோம். அதை ரொம்ப உணர்ந்த காரணத்தாலதான் பால்காரர் நம்ம வீட்டுக்குக் கொடுக்கும்போது கொஞ்சம் ஜாஸ்தியா பாலில் தண்ணீரை கலந்து ஊத்திடுவார். இணை பிரியாம ஒரு தம்பதி இருந்தாலே பிரிக்கிறதுக்கு நிறைய சோதனைகள் வரும். அது எந்த ரூபத்துலயும் வரலாம். சேர்ந்து இருக்கணும்னு முடிவாகிட்டா எந்த தீய சக்தி பிரிக்க நினைச்சாலும் பொங்கி எழுந்துடுவோம். எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கிற இந்த விஷயத்தை, தினம் வீட்ல பால் காய்ச்சும்போது பார்க்க முடியும். பாலில் இருக்கும் தண்ணீரை ‘ஆவியாக்கி’ பிரிக்கிற வேலையை தீ செய்ய ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக, பாலுக்குள்ள இருக்கிற தண்ணீர் ஆவியாகி, பாலை விட்டு பிரிஞ்சு போயிடும். பால் சும்மா இருக்காது. அப்படியே பொங்கி எழுந்து பாத்திரத்துக்கு மேல நிரம்பி வழியும். எந்தத் தீ தன்னையும் தண்ணீரையும் பிரிச்சதோ அந்தத் தீயை பால் அணைச்சுடும். தண்ணீர் ஆவியானதுக்கு அப்புறம் பால் பொங்காம தடுக்கணும்னா, பொங்கி வரும்போதும் கொஞ்சம் தண்ணீரை விட்டா அப்படியே அடங்கிடும். பொங்கின வேகத்துக்கு அடங்குற வேகம் ஈடுகொடுக்கும். 

இந்தக் கதை தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறை பால் காய்ச்சி இறக்கும்போதும் பால் சீறி பொங்கற அழகை ரசிப்பேன். இதுக்கு முன்னால் பால் பொங்குதேன்னு பதட்டம்தான் வரும். இப்போ, ‘ஹை... பால் பொங்குதே’ன்னு ரசிக்க முடியுது. தண்ணீரை ஊற்றினதும் பால் அடங்கிப் போகிற அழகை எந்தக் கவிஞராலும் கவிதையா எழுத முடியாது. ‘இணை பிரியாமல் ஒரு அழகான வாழ்க்கையை வாழணும்’னு தினம் நினைச்சுப் பார்த்துக்க கிடைச்ச வாய்ப்பு மாதிரி அதைப் பார்த்தேன். 

எனக்கு எதையும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் இல்லாமல் போனது. எதையும் புரிந்துகொள்ள முயற்சி எடுப்பேன். அந்தப் புரிதல் அவர்கிட்டே இருந்து கத்துக்கிட்டது. இல்லேன்னா 15 வயசு சிறுமியா, உறவுகளை அனுசரிச்சு, பிள்ளை பெற்று வளர்த்து, வியாபாரத்தை கவனிச்சு, என்னையும் வளர்த்துக்க முடியாம தத்தளிச்சுப் போயிருப்பேன். பள்ளிக்கூடத்தோட படிப்பு முடிஞ்சாலும், வாழ்க்கைப் படிப்பு அவர்கிட்டேயிருந்துதான் தொடங்குச்சு. கூட்டுக் குடும்ப வாழ்வில் அத்தனை பேரையும் இணைத்துக்கொண்டு வாழ்க்கை நடைபோட வேண்டுமானால் ‘புரிந்துகொள்ளும் தன்மைதான்’ அத்தனைக்கும் அஸ்திவாரம். ‘என்னைத் திருமணம் செய்துகொண்டதால் உனக்குப் புது அடையாளம்தான் கிடைக்க வேண்டுமே தவிர, இருக்கிற உன்னுடைய அடையாளத்தையும் இழந்துவிடக் கூடாது’ என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து என்னை ஆளாக்கிய கணவரிடம் புரிந்துணர்வு இருந்தது.  

இணைந்து வாழ வேண்டும் என்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழணும்னு ஒரு நினைப்பு பரவலா இருக்கு. அப்படி சகித்துக்கொண்டு ரொம்ப நாள் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அதை வாழ்ந்ததா சொல்ல முடியாது. பெரிய பெரிய படிப்பு படித்துவிட்டு திருமணம் ஆனதும் எல்லாத் திறமையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்ப வாழ்வில் தொலைந்து போகிற நிறைய பெண்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். வாழ்க்கை, வியாபாரம், முடிவுகள், உறவுகள் எல்லாவற்றிலும் என்னையும் பாதியாக்கிக்கொண்டுதான் இல்லறம் நடத்தியிருக்கிறார் என் கணவர். அதை மத்தவங்க சாதனைன்னு சொல்லுவாங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் அது கௌரவம்.

35 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த எங்கள் வணிகம், இன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற அளவு வளர்ந்து நிற்பதற்குப் பின்னாலும் புரிந்துகொள்ளும் தன்மைதான் ஆணிவேர். வெற்றியைக் கொண்டாட நிறைய பேர் இருக்கலாம். ஆனால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள நாங்கள் இருவர் மட்டும் இருந்த நினைவுகள்தான் இணைந்து வாழ்வதின் பெருமையை உணர்த்தியது. 

நான் குழந்தையாக இருந்தபோதே எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதுவும் பெண் குழந்தை. எனக்கு ஒரு குழந்தை என்றால், என்னையும் சேர்த்து என் கணவருக்கு இரண்டு குழந்தைகள். எல்லோருக்குமே கனவாகவும், இல்லற வாழ்வின் அர்த்தமாகவும் இருப்பது குழந்தைகள்தான். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் மருத்துவர்களும், செவிலியர்களும், ‘தாயும் சேயும் நலமா’ன்னு பார்ப்பாங்க. குழந்தை ஆரோக்கியமா பிறந்திருக்கான்னு அடுத்து கவனிப்பாங்க.

பெத்தவங்களுக்கு முதல்ல தன்னைப் பத்தின கவலையைவிட தன் குழந்தையைப் பத்தின கனவுதான் அதிகமா இருக்கும். ஆரோக்கியமா, அழகா குழந்தை பொறக்கணும்னு வேண்டாத கடவுள் இருக்காது. எங்களுக்கு முதல் குழந்தையா சக்தி தேவி பிறந்தாள். அழகான குழந்தை; மிக மிக அழகான குழந்தை. எங்கள் குலதெய்வமே குழந்தையாக பொறந்திருக்கிறதா பெரியவங்க கொண்டாடினாங்க. குலதெய்வம் பேரையே குழந்தைக்கும் வெச்சோம். நானும் என் கணவரும், உறவுகளும் செல்லமா ‘மயிலு’னு கூப்பிடுவோம். 

புரிந்துகொண்டு வாழ்கிற எங்களின் இல்லற வாழ்க்கையின் அடையாளம் மயிலு. கணவனும் மனைவியும் எவ்வளவு ஒற்றுமையா வாழறோம்னு சோதிக்க நினைத்த கடவுள் எங்க மயிலை எங்களுக்குக் கொடுத்ததாவே நினைக்கிறோம். அவ வெறும் கௌரவம் மட்டுமில்லை. எங்களோட வரம். இன்னிக்கு மயிலோட பொண்ணுக்கு ஆறு வயசு. அறிவும், அழகும், ஆரோக்கியமும் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுற அளவுக்கு இருக்கிற எங்க பேத்திதான் எங்களுக்கு டீச்சர். ‘அப்பச்சி ஏன் லேட்டா சாப்புடுறீங்க?’ன்னு என் கணவரை எனக்கப்புறம் கண்டிக்கிறாங்க பேத்தி. ‘அம்மாயி, நீங்க போயிட்டு வாங்க. மயிலம்மாவை நான் பார்த்துக்கிறேன்’னு என்கிட்டே மயிலோட பொண்ணு சொல்லும்போது எனக்கும் அவருக்கும் பூரிப்புத் தாங்காது. 

சக்தி தேவி என்கிற எங்களுக்குப் பிடிச்ச மயிலுவை நாங்கள் பெற்று வளர்த்த அனுபவம் அடுத்தவங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையைக் கொடுக்கும். ‘சக்தி தேவி அறக்கட்டளை’ மூலம் ‘மாற்றுத் திறனாளிகளாக’ பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயனடைகிறார்கள் என்றால், அந்தப் பெரிய மனதை எங்களுக்குத் தந்தவள் மயிலுதான்...

108 சித்தர்கள் இன்றளவும் அமர்ந்து வழிகாட்டும் ஆலயங்கள் , அபூர்வ தகவல்கள்

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் - இறைவனை நாடு. செய்யும் அனைத்திலும் இறையே உள்ளது  , என்கிற மனப்பான்மையுடன்  வாழ்ந்து - இறைவனுக்கு அடுத்த நிலைமையான சித்த நிலைமையை அடைந்தவர்கள்.

இறை தரிசனம் கண்டு , இறையுடன் இரண்டற கலந்து - இன்றும் நாடி வரும் பக்தர்களை , நல் வழிப்படுத்தும் அவதார புருஷர்கள்.

மனிதர்களாய் பிறந்ததற்கே வாழ்வில் ஒரு அர்த்தம் உள்ளது. .. தன்னையறிதல் முதல் படி. அதன் பிறகு - மற்ற அனைத்தும் , உங்களுக்கே வசப்படும். மனிதப் பிறவியின் நோக்கம் , வெறுமனே வாழ்ந்து , மடிந்து போவது அல்ல. ... பிறவி நோக்கம் அறிவதற்கு , கீழே கொடுக்கப் பட்டுள்ள - சித்தர்கள் அமைந்திருக்கும் - ஆலயங்கள் , அவர்களின் ஆத்மா சக்தி உங்களுக்கு வழி காட்டும்.  


108 சித்தர்கள்

 1. திருமூலர் - சிதம்பரம்.

2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
 
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
 
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் - திருப்பதி, திருமலை

6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் - கும்பகோணம்.

14. உரோமரிசி - திருக்கயிலை

15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.

22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் - அழகர் மலை

24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.

26. காசிபர் - ருத்ரகிரி

27. வரதர் - தென்மலை

28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.

29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி - ஆரூர்

35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.

36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.

41. வள்ளலார் - வடலூர்.

42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45. ராகவேந்திரர் - மந்திராலயம்.

46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் - காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் - பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.

62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.

64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.


66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி
.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.


வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
இந்த பதிவை எழுதியது - முருகன்
தளத்தின் பெயர் - http://www.google.blogspot.com